மாணவர்கள் போராட்டம்: மௌனம் கலைத்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்! – என்ன சொல்கிறார்? | Union Education Minister Dharmendra Pradhan has commented on the students’ protest.

Spread the love

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை வேண்டுமென்றே முடக்குவதற்காக ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மாணவர்களை அரசியல் கருவிகளாக வெட்கமின்றிப் பயன்படுத்துகின்றனர். மேலும், பிரதமரின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, பாதுகாப்பு விதிகளையும் காங்கிரஸ் மீறியுள்ளது. நாடாளுமன்ற அவையில் நீட் தேர்வு மற்றும் இளைஞர்களின் நியாயமான கவலைகள் குறித்து விவாதிக்க அரசு 100 சதவீதம் தயாராக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான விவாதத்திற்குப் பதிலாக ‘அரசியல் நாடகத்தை’ தேர்ந்தெடுத்துள்ளது.

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்

மாணவர்களுக்கான தீர்வுகளைக் காண்பது அவர்களின் நோக்கமல்ல. செய்திகளில் இடம் பெறுவதற்காகப் பிரச்னையை உருவாக்குவதே அவர்களின் நோக்கம். விவாதத்திற்கான கதவுகள் திறந்திருந்தபோதிலும் ராகுல் காந்தி வேண்டுமென்றே மோதலை உருவாக்கப் பார்க்கிறார். இந்திய மாணவர்கள் அரசியல் பிரசாரத்திற்கான வெறும் பொருள்களாகப் பயன்படுத்தப்படுவதை விட மேலான தகுதி படைத்தவர்கள். கூச்சல்களுக்குப் பதிலாகத் தீர்வுகளையும், முடக்கத்திற்குப் பதிலாகப் பொறுப்புணர்வையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவான பதில்களையும், தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்களையும் வழங்க மத்திய அரசு முழுமையாக உறுதியளித்துள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *