‘மாணவர்கள் மீது பழி போட்டு,கல்வியை முடக்காமல் உதவித்தொகையை Dummy முதல்வர் கொடுக்க வேண்டும்’- உதயநிதி| udhayanidhi stalin slams tvk government for students education scholarship

Spread the love

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் “ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.

சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *