மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்தால், அது அவர்களின் எதிர்காலத்தையும், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரையும் கடுமையாகப் பாதிக்கும். அவர்கள் நம் நாட்டின் குழந்தைகள். அன்போடு அவர்களை அணுகுங்கள்.
அவர்களின் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் சீரழித்துவிடாதீர்கள். சீரழிந்த கல்வி முறை மற்றும் நிர்வாகத் தோல்வியால் தங்களுடைய எதிர்காலத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களைப் பார்த்து மனமுடையும் குழந்தைகளின் நிலைக்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து வேட்டையாடுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இன்று மாணவர்கள் ராஜினாமா மற்றும் கணக்குக் கேட்கிறார்கள். ஆனால், இதே நிலை நீடித்தால் நாட்டின் பெற்றோர்களும் ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து உங்களை அதிகாரத்திலிருந்தே கீழிறக்குவார்கள் நண்பரே” என்று பிரதமர் மோடியைச் சாடியிருக்கிறார்.