மாணவர் அடையாள அட்டையில் சாதி இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்|

Spread the love

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வழங்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, அது இனியும் தொடரும்.

அதே நேரத்தில், தற்போது வழங்கப்படவுள்ள புதிய தரவுகளில் சாதி குறித்த விவரங்கள் இடம் பெறாது.

ஏனெனில் பள்ளிகளில் மாணவர்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

மாணவர்களின் நலன் கருதி, விபத்துகள் போன்ற அவசர காலங்களில் அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், வெளியூர் செல்லும் போது மற்றவர்களைத் தொடர்பு கொள்ளவும் இந்த முகவரி மற்றும் ஆதார் தரவுகள் பேருதவியாக இருக்கும்.

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

பத்திரிகைகளில் வந்த சில செய்திகளைப் போல, இந்தத் தரவுகளில் சாதிச் சான்றிதழ்கள் இணைக்கப்படாது என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.

மாணவர்கள் அனைவரும் சமம், எல்லா மதமும் ஒன்று என்ற அடிப்படையில்தான் கல்வித்துறை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, ரத்த வகை மற்றும் ஆதார் அட்டை போன்ற தரவுகள் மட்டுமே இருக்கும். இந்தத் திட்டத்தை 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படிச் செயல்படுத்தலாம் என்பது குறித்து பள்ளி கல்வித்துறையும் வருவாய்த் துறையும் இணைந்து ஆய்வு செய்ய உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *