`மாப்பிளைக்கு சர்க்கரை நோய் இருக்கு’- தரகு பணம் தராத ஆத்திரம்; மண்டபத்தில் திருமணத்தை நிறுத்திய நபர் | matrimony person stops marriage in tuticorin due to pending commission

Spread the love

இதில் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், உடனடியாக மணமகன் வீட்டிற்கு போன் செய்துள்ளனர். அவர்களிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அவர்கள், “இது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம்தான்” என்று கூறியுள்ளனர். ஆனால், அதைக் கேட்காத மணமகள் வீட்டார் உடனடியாக திருமணத்தை நிறுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகனும் மணமகன் வீட்டாரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

சாத்தான்குளம் பஜார்

சாத்தான்குளம் பஜார்

இந்தச் சம்பவம் அறிந்து அங்கு வந்த சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இரு வீட்டாரும் பேசி இந்த திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், மணமகன் வீட்டார், உறவினர்களிடம் விசாரித்து பார்த்தபோது திருமண ஏற்பாட்டாளர், தனக்கு வர வேண்டிய தரகுப் பணத்தைத் தராத ஆத்திரத்தில் இப்படிச் செய்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *