`மிகவும் குண்டாக இருக்கிறாய்; உன்னால் குழந்தை பெற முடியாது!’- மனைவியை சித்ரவதை செய்து கொன்ற கணவன்

Spread the love

பிரியங்கா மிகவும் குண்டாக இருப்பதால் அவரால் ஒருபோதும் குழந்தை பெற முடியாது என்றும் கூறி, பசவராஜ் தனக்கு பிரியங்காவை பிடிக்கவில்லை என்று சித்ரவதை செய்து கொலை செய்துவிட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு முறை கர்ப்பம்

ஆனால் உண்மையில் பிரியங்கா இரண்டு முறை கர்ப்பமானார் என்று பிரியங்காவின் மாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “‘திருமணத்திற்குப் பிறகு இரண்டு முறை கருத்தரித்ததார். ஆனால் அவரது கணவர் மீண்டும் மீண்டும் உடல் ரீதியாகத் தாக்கியதால் கருச்சிதைவு ஏற்பட்டது. எனக்கு அவளைப் பிடிக்கவில்லை, அவள் குண்டாக இருக்கிறாள், குழந்தைகளைப் பெற முடியாது” என்று பசவராஜ் சொல்லிக்கொண்டே இருந்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்” என்று கோரினார்.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பசவராஜ் வத்தர், ரேணவ்வா, சுபாஷ், சித்தரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *