மின்கட்டணம்: '3.70 லட்சம் புகார்கள் வந்திருக்கா?' – ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு நிர்மல்குமார் பதில்

Spread the love

“3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தவெக அரசைக் குற்றம்சாட்டியிருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

இந்நிலையில் செய்தியாளரைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “மின்கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் தவறாக வந்த தகவலின் அடிப்படையில், மக்களைக் குழப்பும் விதமாக ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

ஸ்டாலின் சொல்லும் கணக்கீடுகள் தவறானவை. சமூக வலைத்தளத்தில் அதிகமாக கரண்ட் பில் வந்துள்ளதாகத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வழக்கமான ஆய்வுதான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

கடந்த வருடம் 11 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மூன்று மடங்கு மேல் பில் வந்து இருக்கிறது. இந்த வருடம் 9 லட்சத்து 60 ஆயிரம் பேருக்குத்தான் அதிகமாக வந்து இருக்கிறது.

2 லட்சம் பேருக்குக் கடந்த ஆண்டைவிட குறைவாகத்தான் 3 மடங்கு மேல் வந்து இருக்கிறது. மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மின் கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது தவறு” என்று கூறியிருக்கிறார்.

சிடிஆர் நிர்மல் குமார்
சிடிஆர் நிர்மல் குமார்

தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, “காவிரி பிரச்னையில் முதல்வர் விஜய் விரைவில் முடிவு எடுப்பார். மேகதாது விவகாரத்தில் அரசு தெளிவாகச் செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்னையை ஆய்வு செய்து விரைவில் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிடுவார்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *