மீசைய முறுக்கு 2: “இந்தப் படத்துக்குப் பிறகு கானா பாடல் மீதான பார்வை மாறும்” – ஹிப்ஹாப் ஆதி| Meesaya Murukku 2: “After this film, the perception of Gaana songs will change” – Hiphop Adhi.

Spread the love

கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

சுந்தர் சி – குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

மீசைய முறுக்கு 2

மீசைய முறுக்கு 2

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ஹிப்ஹாப் ஆதி, “”மீசை முறுக்கு’ முதல் பாகம் என்னுடைய சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ‘மீசை முறுக்கு 2’ என்பது ஒரு இசைக் கலைஞனின் கதை. இசை பற்றிய படம். இதில் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஒரு முக்கியமான தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மறைந்த நடிகர் விவேக் சார் நடித்த இடத்திற்கு யாரையும் ஈடு செய்ய முடியாது என்றாலும், இந்தக் கதாபாத்திரத்திற்கு பாபா பாஸ்கர் மாஸ்டர் சரியாக இருப்பார் என்று நம்பி அவரை நடிக்க வைத்தேன். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் ஒரு சிறந்த நடிகராகவும் உருவெடுப்பார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *