
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.230-உம், பவுனுக்கு ரூ.1,840-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை முடிவை நோக்கி நகர்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, கச்சா எண்ணெய் விலை இறங்கும்போது, தங்கம் விலை உயர்கிறது.
இதே பேட்டர்னில் தான், இப்போது தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இந்த ஏற்றம் தொடருமா… இல்லையா என்பது ஈரான் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை பொறுத்தே அமையும்.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,050 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,12,400 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.270 -க்கு விற்பனை ஆகி வருகிறது.