மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி… AK64-க்கு மாஸ் அப்டேட்… – Kumudam

Spread the love

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரசிகர்கள் அன்போடு “அல்டிமேட் ஸ்டார்” என்று அழைக்கப்படக்கூடிய அஜித்குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம்,தீனா, பூவெல்லாம் உன் வாசம்,வில்லன், அட்டகாசம்,. பில்லா,மங்காத்தா, பில்லா 2 உள்ளிட்ட  பல படங்களை நடித்து சினிமா உலகில் “தல அஜித்குமார்” என்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இந்த உச்ச நட்சத்திரமான அஜித்குமார் தனது திரைப்பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டவுள்ளார்.  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட்  பேட் அக்லி”  என்ற திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பிறகு  2025 ஏப்ரல் 10 அன்று வெளியானது. அதனைத் தொடர்ந்து அவரது 64 வது திரைப்படமான  ‘AK64’ குறித்த அதிரடியான மற்றும சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் மூலம் அஜித்குமார் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். இதுவரை முன்னணி  தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த அஜித்குமார் முதன்முறையாக ” ‘AK’ ஹோம் பேனர்” என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘AK64’ திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளார். இதன் மூலம் அஜித்குமார் தயாரிப்பாளராக  தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இதில் பிரசென்டர் மற்றும் நிர்வாகியாக ஷாலினி அஜித்குமார்  உள்ளார்.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் கார்டுகளில்  ஷாலினி அஜித்குமார் வழங்கும் என்று குறிப்பிட உள்ளது. இந்த தகவல்  தல அஜித்குமாரின் ரசிகர்களில் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஷாலினி அஜித்குமார் இப்படத்தின் தயாரிப்பு பணிகளை முன்னின்று நடத்தவுள்ளார். படத்தின் நிதி மேலாண்மை தயாரிப்பு செயல்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றப் பணிகளையும் அவரே நேரடியாக மேற்பார்வையிட உள்ளார்.

“குட்  பேட் அக்லி” படத்தில் அஜித்தை ஒரு பக்கா ஃபேன் பாய் மெட்டீரியலாகக் காட்டிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இப்படத்தையும் இயக்கவுள்ளார். இது ஒரு பக்கா மாஸ் கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாக உள்ளது. விடாமுயற்சி தொடர்ந்து இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் அனிருத் அஜித்குமார் இணையும் இந்த கூட்டணி திரையரங்குகளில் இசைத் திருவிழா ஏற்படுத்தும் என்று எந்தவொரு சந்தேகமில்லை.

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. படத்திற்கான தகுந்த இடங்களைத் தேர்வு செய்யும் லொகேஷன் ஸ்கவுட்டிங் பணிகள் ஏற்கனவே தொடங்கி அதே போல் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்யும் காஸ்டிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

சொந்த தயாரிப்பில் களமிறங்கவுள்ள அஜித்குமார் ஷாலினியின் நிர்வாகத் தயாரிப்பு ஆதிக் ரவிச்சந்திரனின் மாஸ் இயக்கம் அனிருத்தின்  துள்ளலான இசை என ‘AK64 திரைப்படம் என கோலிவுட் வட்டாரங்களில் தற்போது ஹாட்டாபிக்காக மாறியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *