தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் பத்திரிக்கையில் வெளியாகியிருக்கிறது.
அதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டி.டி.பிரவீன், பா.ஜ.க சார்பில் விஜயதரணி, நா.த.க சார்பில் மரிய ஸ்டெல்லா, த.வெ.க சார்பில் மைக்கேல் குமார் களத்தில் உள்ளனர். டி.டி.பிரவீன் தென்கேரள சி.எஸ்.ஐ சபை செயலாளராக உள்ளார். கேரளத்தைச் சேர்ந்தவருக்கு தமிழ்நாட்டில் சீட் கொடுக்கப்பட்டதான விமர்சனம் அவர்மீது உள்ளது.

விஜயதரணி காங்கிரஸ் சார்பில் மூன்றுமுறை வென்ற தொகுதி இது. அவர் பதவிக்காலம் முடியும் முன்பே பா.ஜ.க-வில் இணைந்ததுடன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்த அதிருப்தி தொகுதியில் நிலவுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க என இரு கட்சிகளுக்குமே செல்வாக்குள்ள தொகுதி என்றாலும், சிறுபான்மை வாக்குகள் சிதறாமல் சென்றுவிடுவதால் காங்கிரஸ் வெல்லும்.
இவர்கள் தவிர தூத்துக்குடி- தென்காசி- திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தேர்தலில் கோயில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ, ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியன், ராதாபுரம் தொகுதியில் அப்பாவு, கன்னியாகுமரி தொகுதியில் தளவாய் சுந்தரம் என முன்னோடி அரசியல் புள்ளிகள் களத்தில் இருக்கின்றனர்.
இந்த தொகுதிகளின் கள நிலவரம் குறித்த விகடனின் மெகா சர்வே ரிப்போட் படிக்க க்ளிக் செய்யவும்!