மீன்களை பலாத்காரம் செய்து.. வளைந்த கிடந்த கோய் மீன்.. பாங்காக்கை பதறவைத்த தாய்லாந்து நபர் யாருங்க | Bangkok Koi Fish Abuse.. 51-Year-Old Thai Man Arrested After Shocking Incident Near a Fish Pond

Spread the love

International

oi-Hema Vandhana

பாங்காக்: பாங்காக்கில் ஒரு வீட்டின் வெளியே மீன் தொட்டியில் மீன்களை வளர்த்து வந்துள்ளார்கடள்.. ஆனால், அந்த கலர்ஃபுல் கோய் மீன்கள் திடீரென ஒன்றன் பின் ஒன்றாக இறந்து விட்டன.. அந்த மீன்களின் உடல்களும் வளைந்து இருந்ததாம்.. இதை பார்த்து அந்த வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.. மீன்கள் ஏன் இறந்தன? அவைகள் ஏன் வளைந்து கிடந்தன? என்று குழம்பி விட்டனர்.. இதற்கு பிறகு சிசிடிவி கேமராவை வைத்தார்கள்.. அப்போதுதான், அந்த அதிர்ச்சியான விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது..!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ளது துங் சோங் ஹோங் என்ற பகுதி.. இங்கு சோய் விபாவதி ரங்சித் 66 என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது

Bangkok Koi Fish Abuse

அங்குள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் பெரிய சிமெண்ட் மீன் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியில் பாபி என்பவர் கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக கோய் மீன்களை வளர்த்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் 51 வயதான சுத்திசாய் என்பவர் அடிக்கடி நடந்து செல்வதை பாபி பார்த்திருக்கிறார். சில நேரங்களில் அவர் அங்கே நின்று குளிப்பதையும் பார்த்துள்ளார். ஆனால், அவரைப் பற்றி எந்த சந்தேகமும் வரவில்லை.

மீன் தொட்டிக்கு அருகே அந்த பொருள்

இந்நிலையில், தொட்டியிலிருந்த மீன்களில் தினமும் ஒன்று அல்லது இரண்டு என இறக்க தொடங்கியுள்ளன. இறந்த மீன்களின் உடல்களும் வளைந்திருந்தன.. இதை பார்த்த பாபி, ஒருவேளை மீன்கள் ஒன்றோடு ஒன்று மோதியிருக்கலாம் அல்லது சண்டையிட்டிருக்கலாம் என்று முதலில் நினைத்துள்ளார். வீட்டில் சிசிடிவி கேமராவை வைத்திருந்தாலும், மீன் தொட்டியை அது சரியாக காட்டவில்லை.. பாபியும் அதைப் பெரிதாக கவனிக்கவில்லை.

இந்த நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி மதியம் மீன் தொட்டிக்கு அருகே ஒரு பாலியல் பொருள் கிடந்துள்ளது. அதை வீட்டு வேலைக்காரர், சுத்தம் செய்யும்போது அகற்றியுள்ளார். இதை பார்த்த பாபிக்கு சந்தேகம் வந்துள்ளது.. அதனால் கண்காணிப்பு கேமராவை மீன் தொட்டியை முழுமையாக கவர் செய்யும் வகையில் திருப்பி வைத்துள்ளார்.

சைக்கிளில் வந்து பாலியல் டார்ச்சர்

அன்றிரவு சுமார் 8.30 மணியளவில் சுத்திசாய் சைக்கிளில் அங்கு வந்துள்ளார். சைக்கிளை தொட்டியின் அருகே நிறுத்திவிட்டு, அங்கும் இங்கும் நடந்து, சுற்றுமுற்றும் பார்த்தார்.. தொட்டிக்குள்ளிருந்து ஒரு மீனை வெளியே எடுத்தார்.. சுமார் 8.38 மணியளவில் தன்னுடைய ஆடைகளை கழற்றிவிட்டு திடீரென ஒரு கோய் மீனை பிடித்து, அந்த மீனுக்கு பாலியல் ரீதியாக டார்ச்சர் தர துவங்கிவிட்டார்.. பிறகு அந்த மீனை மறுபடியும் தொட்டிக்குள் விட்டுவிட்டார்.. வெளியில் நடந்து கொண்டிருப்பது அப்படியே கேமராவில் பதிவாகி கொண்டிருந்தது.

இதைப்பார்த்து பதறிப்போய்விட்டார் பாபி. உடனே வீட்டு வேலைக்காரரும், பாபியும், வெளியே ஓடி வந்து அவரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் சுத்திசாய் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுவிட்டார். அப்போதும் பாபி அவரை விடாமல் பின்னடியே துரத்தி சென்றுள்ளார். அப்போது செருப்பு தடுமாறி கீழே விழுந்த பாபிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மேல் அவராமல் ஓட முடியாமல் போலீஸில் புகார் தந்தார்..

கோய் மீன்களிடம் பகீர்

சைக்கிளில் தப்பி சென்றதால், சுத்திசாய் அந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.. இந்நிலையில்தான், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி லக் சி பகுதியில் உள்ள சியாங் காங் பகுதியில் அவர் நடந்து செல்வதை போலீசார் பார்த்தனர்.. அப்போது சம்பவத்தன்று அணிந்திருந்த அதே உடையில் சுத்திசாய் இருந்துள்ளார்.. போலீசாரை பார்த்ததும் அன்றும் அவர் ஓட முயன்றுள்ளார். ஆனால், விரட்டிப் பிடித்து கைது செய்து விட்டனர். விசாரணையும் ஆரம்பமானது,

கண்காணிப்பு காட்சியில் இருப்பது தான்தான் என்று சுத்திசாய் ஒப்புக்கொண்டாராம்.. போலீசாரிடம் சுத்திசாய் சொல்லும்போது, “முதலில் அந்த இடத்துக்கு குளிப்பதற்காகத்தான் போனேன்.. தொட்டியில் கோய் மீன்கள் நீந்துவதை பார்த்ததுமே எனகுகு பாலியல் தூண்டுதல் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் அந்த மீனிடம் 2 முறை இதுபோன்ற செயலில் ஈடுபட்டேன்.. இதற்கு முன்பும் மற்ற மீன்களிடம் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கிறேன்.

நாய், குப்பையில் பொம்மை

முள் கொண்ட சில வகை மீன்களை மட்டும் தவிர்த்துவிடுவேன்.. கோய் மீன்களால் அதிக வலி ஏற்படவில்லை என்பதால் அவற்றை தேர்ந்தெடுத்தேன்.. எனக்கென்று துணை யாரும் இல்லை.. பணமும் இல்லாததால் பாலியல் தேவைக்காக வேறு வழியை நாட முடியவில்லை.

அதனால்தான், . சில ஆண்டுகளுக்கு முன்பு குட்டிகளுடன் இருந்த பெண் நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தினேன்.. அதற்காக என்னை கைது செய்து ஜெயிலில் அடைத்து விட்டார்கள். குப்பையில் கிடைத்த ஒரு பொம்மையுடனும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டேன்.. பணம் கிடைத்தால், போதைப்பொருள் பயன்படுத்துவேன்.. ஆனால், அதை அடிக்கடி வாங்க என்னிடம் பணம் இல்லை.. அதனால் கிடைத்த போதைப்பொருளையே பயன்படுத்தினேன்” என்றெல்லாம் கூறி போலீசாரையே அதிர வைத்துள்ளார் சுத்திசாய்.

மீன் தொட்டிக்கு செக்யூரிட்டி

இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பிறர் சொத்துக்குள் அத்துமீறி நுழைதல், சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மீன்கள் ஏன் தொடர்ந்து இறந்தன என்ற கேள்வியுடன் தொடங்கிய பாபியின் சந்தேகம், கேமராவை திருப்பியதன் மூலம் வேறு ஒரு ஷாக் உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, மீன் தொட்டியைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கவும் பாபி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…

மனநல பிரச்சனையா?

இப்படிப்பட்ட பகீர் செயலுக்கு, ஒரே ஒரு மருத்துவ காரணம் என்று சொல்ல முடியாது. சிலரிடம் வழக்கத்திற்கு மாறான பாலியல் ஈர்ப்பு அல்லது அதை கட்டுப்படுத்த முடியாத நிலை போன்ற மனநலப் பிரச்சினைகள் இருக்கலாம் என்கிறார்கள்..

விலங்குகள் மீது பாலியல் ஈர்ப்பு, சில பாராஃபிலிக் கோளாறுகளின் ஒரு வெளிப்பாடாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்களும் சொல்கிறார்கள்.. இருந்தாலும் ஒருவருக்கு இதுபோன்ற கோளாறு இருக்கிறதா என்பதை மனநல மருத்துவரின் முறையான மதிப்பீட்டுக்குப் பிறகே உறுதி செய்ய முடியுமாம்.

சம்பந்தப்பட்ட சுத்திசாய் செய்த செயலுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியவில்லை.. ஒருவேளை மனநல பிரச்சனையாக இருந்தால் அதற்கான சிகிச்சையும் தரப்படும் என்கிறார்கள்.. எனினும் சுத்திசாய் செய்த செயலால் பாங்காக் பதறிப்போய் கிடக்கிறது…!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *