தமிழ்நாட்டில்தான் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் என்றொரு கருத்து முன்பு இருந்தது. “சித்தி’, ‘மெட்டி ஒலி’ ஆகிய தொடர்கள் இங்கு சக்கைப் போடு போட்டது நினைவிருக்கலாம். கடைசியாக சன் டிவியில் ‘ரோஜா’ தொடர் சுமார் எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பானது.
ஆனால் மலையாள சீரியல் ஏரியாவிலும் கடந்த ஏழு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த ‘மௌன ராகம்’ தொடர், தற்போது முடிவடைந்திருக்கிறது.
இந்த தொடர் தொடர்புடைய இன்னொரு செய்திதான் இங்கு ஹைலைட். மலையாள ‘மௌன ராக’த்தின் ஹீரோயினாக சுமார் 1700 எபிசோடுகள் வரை நடித்தது நம்மூர்ப் பொண்ணு ஐஸ்வர்யா ராம்சாய்.
ஐஸ்வர்யா தமிழில் ‘சுமங்கலி’, ‘கல்யாண வீடு’, ‘பாரதிதாசன் காலனி’ முதலான சில தொடர்களில் நடித்துள்ளார். தமிழ் சீரியல் தராத பெயர், புகழை மலையாள சின்னத்திரை தந்துள்ளது. திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் ‘மகா’ வாக நடித்த கீதாஞ்சலியின் உடன் பிறந்த சகோதரி இவர்.
மலையாள சின்னத்திரையில் இவர் கலக்குவது குறித்து முன்பே விகடனுக்குப் பேசியிருந்தார்.