முதலமைச்சரை ஒருமையில் பேசிய திமுக கவுன்சிலர்; மேடையிலேயே கண்டித்த எம்.பி கனிமொழி – வைரலாகும் வீடியோ | DMK Councillor Addresses cm vijay Disrespectfully; MP Kanimozhi Rebukes Her on Stage

Spread the love

இதன் தொடர்ச்சியாக, தவெக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில், எஸ்பிளனேடு காவல் நிலைய (B-2) காவல்துறையினர் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது அவதூறாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதே நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனை எம்.பி கனிமொழி கண்டித்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எம்.பி கனிமொழி

எம்.பி கனிமொழி

மேடையில் பேசிய கனிமொழி, “நம் எதிராளிகள் யார்? என்னவாக இருக்கிறார்கள் என்பதை வைத்து, நாம் நம்மை உருவாக்கிக்கொள்ளக் கூடாது. அவர்கள் பேசட்டும். அவர்களுக்கு தெரிந்தது, அவர்களின் தரம் அவ்வளவுதான்.

நாம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்திருப்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்” என திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனைக் கண்டித்திருக்கிறார்.

தவிர முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, “சுதாவுக்கு ஒரு அறிவுறுத்தல். வேகமாகவும், கோவமாகவும் பேசுகிறீர்கள். ஆனால், நாம் நாகரிகத்தில் இருந்து விடுபடாமல் பேச வேண்டும். ஒருமையில் எல்லாம் பேசக் கூடாது” என அறிவுறுத்தியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *