தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பல முக்கியத் தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை வாழ்த்தி நடிகர் நானி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “வாழ்த்துகள் விஜய் சார். முதலில் சந்தேகித்தார்கள், தற்போது மகுடம் சூட்டியிருக்கிறார்கள். இது எங்கள் வீட்டில் நடந்தது, இப்போது எங்கள் பக்கத்து வீட்டிலும் நடக்கிறது.
பின்தங்கிய நிலையில் இருந்த ஒருவர் வெற்றி பெறுவது என்பது எப்போதுமே ஒரு சிறந்த சினிமா (அல்லது சிறந்த அரசியல் என்று சொல்லலாமா?) தங்கள் முடிவைத் தெளிவாகத் தெரிவித்துள்ள தமிழக மக்களுக்கு, இனி நல்லவை நடக்கும் என நம்புகிறேன்” என்று விஜய்யை வாழ்த்தியிருக்கிறார்.