“‘முதல்வன்’ படத்தின் கதை ரஜினி சார், விஜய்-க்குச் சொன்ன பிறகுதான் எனக்குச் சொல்லப்பட்டது!” – அர்ஜூன் |”The story of ‘Mudhalvan’ was narrated to me after it had been pitched to Rajini Sir and Vijay!” — Arjun

Spread the love

அர்ஜுன் பேசுகையில், “‘முதல்வன்’ படத்தின் கதை ரஜினி சார், விஜய்-க்குச் சொன்ன பிறகுதான் எனக்குச் சொல்லப்பட்டது. ஒருவேளை நான் அந்தப் படத்துல நடிக்கலைனா நிச்சயமாக மிஸ் பண்ணியிருப்பேன்.

ஏன்னா, அது அவ்வளவு அருமையான திரைப்படம். அவ்வளவு சுலபமாகவும் அந்த கேரக்டர்ஸ் நமக்குக் கிடைச்சிடாது. ‘முதல்வன்’ திரைப்படத்தை சமகால அரசியலோடு பொருத்திப் பதிவிடுகிற சமூக வலைதளப் பதிவுகளைப் பார்க்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. அவரை நான் சமீபத்துல மீட் பண்ணியிருந்தேன்.

அவரை நான் மீட் பண்ணின அப்போ, ‘ரொம்ப பெருமையாக இருக்கு. நம்ம திரைத்துறையிலிருந்து இன்னொரு முதல்வர்.

இதுவொரு சாதனை. கட்சி தொடங்கிச் சந்தித்த முதல் தேர்தலிலேயே இப்படியான ஒரு வெற்றி உங்களுக்குக் கிடைச்சிருக்கு’னு என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன்.

கடவுள் அவருக்குப் பெரிய வலிமையைக் கொடுக்கணும். அவர் முன்னால நிறைய பொறுப்புகள் இருக்கு” எனக் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *