“முதல்வர் விஜய்யால் வெற்றி நிச்சயம்” முதல் ஆளாக வந்து வாக்களித்த தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா | Dharapuram DMK candidate Suganya casted her first vote today

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காலையில் முதல் ஆளாக வந்து ஓட்டு போட்ட திமுக வேட்பாளர் சுகன்யா, திமுக நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தியதால் தங்களுக்கு வெற்றி உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திமுக வேட்பாளரான நான் இன்று முதல் ஓட்டை போட்டுவிட்டேன். வெற்றிகரமாக தொடங்கி வைத்திருக்கிறேன், வெற்றி நிச்சயம். பாதுகாப்பு ஏற்பாடுகள் பூத் வாரியாக பார்த்ததில் நன்றாக இருக்கிறது.

by poll 2026 dharapuram 2026

இந்த தேர்தலில் வெற்றி என்பது சவாலாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. வெற்றி நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான். 3 மாதங்களாக மக்களுக்கு கிடைத்த ஏமாற்றத்தால் நிச்சயம் அவர்கள் மாற்றத்தை தேடி திமுகவுக்கு வாக்களிப்பர்.

தாராபுரத்தில் திமுக வெற்றிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்கள் எந்தளவுக்கு உழைக்க முடியுமோ அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார்கள். கடந்த 3 மாதங்களாக தவெக எந்த நலத்திட்டங்களையும் மக்களும் செய்யவில்லை. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த 100 நாள் சாதனைகளையும் தவெக ஆட்சியின் 100 நாள் சாதனைகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.

திமுக ஆட்சி வந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே வந்துவிட்டது. தாராபுரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியபாமா தவெகவில் இணைந்துவிட்டார். அவரை மக்கள் புறக்கணித்ததை சமூகவலைதள பக்கங்களில் எல்லாருமே பார்த்திருப்பார்கள்.

முதல்வர் விஜய் வந்து ரோடு ஷோ செய்ததே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். என்னை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு கேட்டனர். ஆனால் முதல்வர் விஜய்யிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை, அதனால் அவர் ரோடு ஷோ நடத்திவிட்டு சென்றுள்ளார். இதுவே எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி என சுகன்யா தெரிவித்துள்ளார்.

by poll 2026 dharapuram 2026

யார் இந்த சுகன்யா?

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யா, வழக்கறிஞர். இவர் முதுகலை படிப்பும் படித்துள்ளார். தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அந்த பகுதி மக்களுடன் அரசியல், சமூக ரீதியாக தொடர்பு கொண்டவர். இவரது குடும்பம் திமுகவில் பணியாற்றி வருகிறார்கள். இவரது கணவர் மணிவாசகம் திமுக ஒன்றிய அணி செயலாளராக இருக்கிறார். இவரது தந்தையும் திமுகவில் பணியாற்றியவர் என சொல்லப்படுகிறது.

தாராபுரத்தில் இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இது மாலை 6 மணிக்கு நிறைவடையும். வாக்கு எண்ணிக்கை வரும் 9ஆம் தேதியாகும். தாராபுரத்தில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தாராபுரத்தில் 320 வாக்குச் சாவடிகள் உள்ளன. இங்கு மொத்தம் 2.23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,07,285, பெண் வாக்காளர்கள் 1,16,013 ஆவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *