“முதிர்ச்சியற்ற செயல்” முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த கேரள காங்கிரஸ் எம்.பி!

Spread the love

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு

இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமான முடிவு, தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அமைக்கப்படும் நடுநிலையான நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே அமையும். ​இந்த உண்மைகளைத் தாண்டி, புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் எனத் தமிழக அரசு கொள்கை ரீதியாக அறிவித்திருப்பது முதிர்ச்சியற்ற செயலாகும். மேலும், அணையின் பாதுகாப்பு குறித்த முறையான ஆய்வுகள் முடிவதற்கு முன்பே, நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று கூறுவது பொறுப்பற்றத்தனமானது. ​கேரள மக்களின் அச்சத்தைப் போக்கி, இரு மாநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழகத்திற்குத் தேவையான தண்ணீர் தடையின்றி கிடைக்கவும் புதிய அணை கட்டுவதே நிரந்தரத் தீர்வாகும். இதற்குச் சகோதர மாநிலமான கேரளத்துடன் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்பதே தற்போதைய அவசியமாகும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *