சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். மசினகுடி, பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பழங்குடி மாணவர்களுடன் உட்கார்ந்து உணவும் சாப்பிட்டிருக்கிறார்.
அதேவேளையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் வனத்துறையினருடன் சென்ற அமைச்சர் வன்னி அரசு, அது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் ரீல்ஸாக பகிர்ந்திருக்கிறார். புலிகள் நடமாடும் காட்டில் புலியை விரட்டிச் செல்வது போன்று ரீல்ஸில் இடம்பெற்றிருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஊட்டி சாதிக் மற்றும் குழுவினர், ” தமிழ்நாடு வனத்துறை விதிகளின்படி, சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளை நெருங்கவோ அல்லது சஃபாரி வாகனங்களிலிருந்து கீழே இறங்கவோ கூடாது. ஆனால், அமைச்சர் வன்னி அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வனத்துறையின் சட்டதிட்டங்களை மீறியிருக்கிறார்.