
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருந்த போதிலும் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையன்ற நிலையில், காங்கிரசு 5 எம்எல்ஏக்கள் மட்டும் ஆதரவு அளித்து இருந்தனர். மீதம் தேவையான 6 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற தவெக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. 2 முறை ஆளுநர் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தி இருந்தார்.
ஆனால் பெருபான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை அளித்தால் மட்டும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பேன் என ஆளுநர் அர்லேகர் விஜயிடம் தெரிவித்து விட்டார். இதை தொடர்ந்து இ.கம்யூ, மா.கம்யூ, விசிக என 6 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இ.கம்யூ கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கடிதத்தை தவெக நிர்வாகி சிடி நிர்மல்குமாரிடம் அளித்துவிட்டது.
மா.கம்யூ கட்சி இன்று காலை தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக 4 மணி நேரம் ஆலோசனை நடத்தியது. இதன் பின்னர் அக்கட்சியின் மாநில குழு கூடி ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசித்தது. தவெகவிற்கு ஆதரவு அளிக்க மாநில குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தை அக்கட்சி நிர்வாகி சிடி நிர்மல்குமாரிடம் மா.கம்யூ கட்சி வழங்கியது.
இன்று மாலை விசிக உயர்மட்ட குழு கூட்டம் கூட உள்ளது. இதில் தவெகவிற்கு ஆதரவு அளிக்க முடிவெடுக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதரவு கடிதத்தை நாளை தவெகவிடம் விசிக வழங்க உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் மேஜிக் எண் 118-ஐ தவெக எட்டியுள்ளது.