`மெஹந்தி போடவும் வந்தாச்சு மெஷின்.. Some more jobs gone’ – தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ வைரல்! | Harsh Goenka shares video of machine applying mehendi

Spread the love

திருமணம், விழா என்றாலே நினைவுக்கு வருவது மெஹந்தி. ஒரு கையில் அழகான டிசைனை உருவாக்க மெஹந்தி கலைஞரின் பொறுமையும் கைத்திறனும் அவசியம். ஆனால், இனி இதையும் மெஷின் செய்யுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது தற்போது வைரலாகும் ஒரு வீடியோ.

தொழிலதிபர் Harsh Goenka, X தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு பெண் தனது கையை ஒரு மெஷினுக்குள் வைக்க, அந்த மெஷின் அவரது கையில் மெஹந்தி டிசைனை வரைவதுபோல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவைப் பகிர்ந்த Goenka, “Some more jobs gone” என்று குறிப்பிட்டிருந்தார்.

மனிதர்களின் வேலைக்கு மெஷின் போட்டியா?

இந்தப் பதிவு வெளியானதும் automation குறித்த விவாதம் தொடங்கியது. மெஷினால் வேகமாகவும் ஒரே மாதிரியான டிசைன்களையும் உருவாக்க முடியும் என்றாலும், மெஹந்தி கலைஞர்களின் கைத்திறன், creativity, customer-க்கு ஏற்ப டிசைனை மாற்றும் திறன் ஆகியவற்றை ஒரு மெஷின் முழுமையாக மாற்றுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *