அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கின்றது. முன்பு அ.தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, காவிரி அல்லது மேகதாது பிரச்னை வரும்போது அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண்பார்கள்.
அ.தி.மு.க ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்னையில் போராடிப் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக்கூட, இந்த அரசால் காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. கர்நாடக அரசு அங்குள்ள அரசியல் கட்சிகளையும் விவசாயிகளையும் மதிக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. காவிரி விவகாரத்தின் வரலாறு தெரியாத ஒரு ஆட்சியாகவே இது செயல்படுகிறது.” என்றார்.