மேகதாது விவகாரம்: “ராகுல் காந்தியால் இந்த ஒருவரியை பகிரங்கமாகச் சொல்ல முடியுமா?” – அன்புமணி சவால்! | Anbumani’s challenge with rahul gandhi and manickam thagoor about megetattu issue

Spread the love

எனவே, பேச்சுவார்த்தை என்பது கர்நாடக அரசுடன் அல்லாமல் மத்திய அரசிடமும், பிரதமர் மோடியிடமுமே நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்து, மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை திரும்பப் பெற உத்தரவிடச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மத்தியிலுள்ள பா.ஜ.க அரசும், கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ் அரசும் கூட்டுச் சதி செய்கிறது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர், “2018-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், தமிழ்நாட்டின் அனுமதி பெற்றே கர்நாடகா அணை கட்ட வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை” எனத் தவறான தகவலைப் பதிவு செய்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மேல்மடை மாநிலம் எந்தவொரு கட்டுமானத்தையும் கீழ்மடை மாநிலத்தின் அனுமதியின்றி செய்ய முடியாது என்பதே சர்வதேச அளவிலான நதிநீர் ஒப்பந்த விதியாகும். எனவே, இந்த உண்மையை மறைத்து நாடாளுமன்றத்தில் பொய் உரைத்த மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *