“மேக்கப்பும் கலையாம நடிக்கிறது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்!” – ‘ரெசார்ட்’ தான்யா |”Acting without messing up the makeup is indeed a bit difficult!” – ‘Resort’ Dhanya

Spread the love

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது “ரெசார்ட்’ சீரிஸ். அந்த சீரிஸில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கும் தன்யா மற்றும் விஷ்ணு பாலாவை நம் டெலி விகடன் சேனலுக்காகப் பேட்டி கண்டோம். மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் பேரன் மற்றும் நடிகை கீதா கைலாசத்தின் மகன்தான் விஷ்ணு பாலா.

Resort Series - Jio Hotstar

Resort Series – Jio Hotstar

தன்யா பேசியபோது, “முதல்ல, இந்த சீரிஸ் மக்களுக்கு கனெக்ட் ஆகுமானு சந்தேகம் இருந்தது. இது புது வகையான கதைக் களம் என்பதால் தொடக்கத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நாங்க எதிர்பார்க்கல.

இந்த சீரிஸ்ல என்னோட கதாபாத்திரம் என்னோட நிஜ வாழ்க்கை பண்புகளுக்கு நேர் எதிரானது. கதாபாத்திரத்துக்காக நான் ரொம்ப அமைதியா, பொறுமையா, நிதானமா இருந்தேன்.

ஆனா, நிஜத்துல நான் எப்போதும் துருதுருனு ஜாலியாகத்தான் இருப்பேன்.” என்றவர், “ஒரு சீன் நடிக்கிறதுக்கு முன்னாடி அந்த சீனை எப்படி இன்னும் மேன்மைப்படுத்தலாம்னு நானும் விஷ்ணுவும் பேசிப்போம். அதனால எங்களுக்கு அந்த சீன் நடிக்கும் போது உண்மையான ஃபீல் கிடைக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *