மேக்கேதாட்டு அணை கட்டுவதில் உறுதி! தமிழ்நாட்டிற்கு டி.கே. சிவக்குமார் விடுத்த கோரிக்கை|Mekedatu Dam Row: DK Shivakumar Sends a Strong Message to TN

Spread the love

பாஜகவும் ஒத்துக்கொண்டது…

மேக்கேதாட்டூ நீர்த்தேக்கத்தால் தமிழ்நாட்டிற்கும் கூடுதல் பலன்களே கிடைக்கும். இது ஒரு சமநிலை நீர்த்தேக்கம் என்றுதான் அழைக்கப்படுகிறது.

நாங்கள் ஏற்கெனவே பிற பகுதிகளில் சுமார் 5,400 ஏக்கர் வன நிலத்தை அடையாளப்படுத்தியுள்ளோம்.

அதை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளோம். அந்த நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அது முடிந்தவுடனேயே, நாங்கள் நமது விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்போம்.

இந்த விவகாரத்தில் கர்நாடகா ஒற்றுமையுடன் நிற்கிறது. கட்சி எல்லைகளைக் கடந்து, அனைத்து பாஜக மற்றும் என்.டி.ஏ. (NDA) தலைவர்களும் மேக்கேதாட்டூ விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார்

சண்டை போடும் பேச்சுக்கே இடமில்லை

தமிழ்நாடு முதலமைச்சருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்; ஒரு குழுவை இங்கு அனுப்பி வையுங்கள். இந்த வாய்ப்பை நாங்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டோம்.

சண்டை போடும் பேச்சுக்கே இடமில்லை; அந்த நாள்களெல்லாம் கடந்துபோய்விட்டன. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிவிட்டது. இந்த நாட்டின் சட்டத்திற்கு நாம் மதிப்பளிப்போம்.

ஒன்றிணைந்து செயல்பட்டுத் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வோம். நம்மிடையேயான ஒற்றுமைப் பிணைப்பை மேலும் வலுப்படுத்துவோம்…” என்று பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *