மேயர் ப்ரியா VS தவெக பெண் எம்எல்ஏ பல்லவி இடையே மோதல்:  அரசு விழாவில் பதற்றம் – Kumudam

Spread the love

2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை திருவிக நகர் தொகுதியில் தவெக சார்பில் பல்லவி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் திருவிக நகர் தொகுதிகுட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளிகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முதல் நிகழ்ச்சியாக புளியந்தோப்பில் உள்ள உருது பள்ளி புதிய கட்டிடத்தை மேயர் ப்ரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது தவெக பெண் எம்எல்ஏ பல்லவி தனியாக கத்திரிகோல் வைத்து தனியாக ரிப்பன் வெட்டினார்.

இதை தொடர்ந்து, பள்ளிக்கு உள்ளே குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேயர் ப்ரியா மெழுகு வர்த்தி மூலம் குத்துவிளக்கு ஏற்றிவிட்டு, பக்கத்தில் இருந்த தவெக பெண் எம்எல்ஏ பல்லவிக்கு மெழுகுவர்த்தி தரவில்லை. அதற்கு பதிலாக பல்லவிக்கு அருகில் இருந்த அதிகாரியை குத்துவிளக்கு ஏற்றும்படி மேயர் ப்ரியா மெழுகுவர்த்தியை கொடுத்தார். இதனால் இந்த நிகழ்ச்சியில் இருந்த எம்எல்ஏ பல்லவி கோபித்து கொண்டு நிகழ்ச்சியை விட்டு புறப்பட்டு சென்றார். 

இதை தொடர்ந்து 2-வது நிகழ்ச்சியாக புளியந்தோப்பு துவக்க பள்ளி புதிய கட்டிடத்தை  மேயர் ப்ரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதன் பின்னர்  மேயர் பிரியா மற்றும் தொகுதி எம்.எல்.ஏ. பல்லவி குத்துவிளக்கு ஏற்றுமாறு மெழுகுவர்த்தி கொடுத்த போது அவர் வாங்க மறுத்தார்.   அனைத்து திரிகளையும் நீங்களே ஏற்றுங்கள் என மேயரிடம் தவெக எம்.எல்.ஏ. பல்லவி கூறினார். மேயர் ப்ரியா மற்றும் தவெக பெண் எம்எல்ஏ பல்லவி இடையே அரசு விழாவில் ஏற்பட்ட மோதல்  பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *