மேஷம் – மீனம்: தினப்பலன்கள்!

Dinamani2f2024 10 202f9jk4u93w2f202409293232736.jpg
Spread the love

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

21-12-2024 சனிக்கிழமை

 மேஷம்:

இன்று ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும்  செலவும் உண்டாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.  மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.  பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தேவையானவை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ரிஷபம்:

இன்று கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மிதுனம்:

இன்று எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். உடல் ஆரோக்யம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும், மன வலிமையும் உண்டாகும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும்.  பணவரவு இருக்கும். எதிர்ப்புகள் விலகும். எந்த காரியம் செய்தாலும் அதிலுள்ள தடைகளை சமாளிப்பீர்கள். புதிய நபர்களின்  நட்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கடகம்:

இன்று பணவரத்து திருப்திதருவதாக உள்ளது. வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்க தாமதம் ஏற்படலாம். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான போக்கு காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்:

இன்று பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.  புதிய வீடு கட்டும் பணி அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும்.  வாகனங்களை மாற்றும் எண்ணம் தோன்றும் சுக அனுபவம் உண்டாகும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் இருந்த டென்ஷன் நீங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கன்னி:

இன்று வழக்குகளில் சாதகமான பலன் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபார போட்டிகள் விலகும். மற்றவர்களால் ஏற்பட்ட பழிசொல் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பெண்களுக்கு வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

துலாம்:

இன்று சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெயரும், புகழும் கிடைக்கும். உங்களது திறமையான செயல்களுக்கு  பாராட்டுகளும் கிடைக்கலாம். உங்களது சேமிப்பு குறையலாம். விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பணியாட்களால் பொருள் நஷ்டம் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

விருச்சிகம்:

இன்று வாய்க்கு  ருசியான உணவு கிடைக்கும். பணவரத்து பலவழிகளிலும் இருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனைவியின் உடல்நிலையில் கவனம் தேவை.  பல்வேறு வகையிலும் புகழ் உண்டாகும். சொத்துக்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து அதிகப்படும், விருந்து, சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள்.  மன மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடக்கும். பொன்னும், பொருளும் சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு:

இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். சக மாணவர்கள் உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பொன்னும், பொருளும் சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்:

இன்று அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.  காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கும்பம்:

இன்று எந்த ஒரு பிரச்சனைகளையும் சமாதானமாக பேசி  முடிப்பீர்கள். சிற்சில பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓரளவு நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மீனம்:

இன்று தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள். வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. அதே வேளையில் தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கைத்துணை வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. எந்தக் காரியங்களையும் நிதானமாக யோசித்து செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *