மோடி குறித்து ட்ரம்ப் பாராட்டு: இந்தியா மீது முழு நம்பிக்கை உறுதி|Trump Calls PM Modi a Close Friend at US Event in Delhi

Spread the love

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ நான்கு நாள் இந்தியப் பயணத்தில் இருக்கிறார்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில், “அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை’ கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்ப்ரைஸாக போன்காலில் கலந்துகொண்டார். அதை தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்காவின் இந்திய தூதர் செர்ஜியோ கோர் பகிர்ந்துள்ளார்.

ட்ரம்ப் அந்த நிகழ்ச்சியில் Live போன்காலில் பேசியதாவது…

“இந்தியாவை எனக்கு அவ்வளவு பிடிக்கும். பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர். அவர் என்னுடைய நல்ல நண்பர்.

ட்ரம்ப்

ட்ரம்ப்
White House

செர்ஜியோ ஒரு அற்புதமான மனிதர். இந்தியாவுடன் நாம் இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்ததே இல்லை.

இந்தியாவும், இந்திய மக்களும் என்னையும், எங்களது நாட்டையும் 100 சதவிகிதம் நம்பலாம். அவர்களுக்கு எப்போது, என்ன உதவி தேவையென்றாலும் யாரை அழைக்க வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நேராக இங்கே எங்களை அழைக்கலாம். நாங்களும் இப்போது மிகச்சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புதிய சாதனைகளைப் படைத்து வருகிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *