சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தில் உரையாற்றினார் இந்தியப் பிரதமர் மோடி.
அப்போது அவர், “சில சக்திகள் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சதிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
ஒரு தசாப்தத்திற்கும் மேலான விரக்திக்கும் ஏமாற்றத்திற்கும் பிறகு, அந்தச் சக்திகள் இப்போது பகிரங்கமாகவே வெளிவரத் தொடங்கிவிட்டன.
வெளிநாடுகளில் யார் யாரை ரகசியமாகச் சந்திக்கிறார்கள்? இந்திய எதிர்ப்புச் சக்திகள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றன? இந்தியாவின் எதிரிகளின் மொழியில் பேசுபவர்கள் யார்?
இந்த அனைத்தையும் நாம் அடையாளம் கண்டு, ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, சமூக வலைதளங்கள் ஆயுதமாக்கப்படுவது, வதந்திகள் பரப்பப்படுவது மற்றும் இந்தியாவின் பிம்பத்தைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஆகியவை கவலையளிக்கின்றன.
இந்தச் சவால்களைச் சமாளிக்க நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று பேசியிருந்தார்.