Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஐபிஎல் தொடரில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை வென்று, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உருவாகி இருக்கும் சூழலில், தற்போது சர்வதேச அரங்கில் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இலங்கையில் நடந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணி மற்றும் இலங்கை ஏ அணி அணிகள் மோதின. இந்த ஆட்டம் டை ஆகி, பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரில் இந்திய அணி தோல்வியடைந்தது. தோல்விக்குப் பின் இலங்கை வீரர் ஒருவர் செய்த ஸ்லெட்ஜிங் செய்ததால் ஆத்திரமடைந்த வைபவ் சூர்யவன்ஷி, மைதானத்திலேயே அந்த வீரரை ஆக்ரோஷமாகத் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக பல விவாதங்களுக்குப் பின் இந்த ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் இலங்கை அணி 17 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியின் சார்பில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கே களம் இறங்கினர். ஆனால் இந்திய அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தியா தோற்றவுடன் இலங்கை வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை அணியின் விஷென் ஹலம்பாகே என்ற வீரர், வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து, “மேட்ச் முடிந்துவிட்டது.. வீட்டுக்கு கிளம்புங்க” என்று வம்பிழுக்கும் விதமாக பேசி இருக்கிறார். ஏற்கனவே தோல்வியின் விரக்தியில் இருந்த 15 வயது வைபவ், இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கொந்தளித்துவிட்டார்.
இலங்கை வீரர் ஹலம்பாகேவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை ஆக்ரோஷமாகத் தள்ளிவிட்டார். இருவரும் ஒருவரையொருவர் தாக்க முயன்றதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை கையை மீறிச் செல்வதைக் கண்ட இலங்கை அணியின் சீனியர் சர்வதேச வீரரான டிக்வெல்லா மற்றும் பிற வீரர்கள் உடனடியாக ஓடிவந்து வைபவ் சூர்யவன்ஷியை தடுத்து நிறுத்தினர்.
எனினும், பெவிலியன் நோக்கி நடந்து செல்லும் போதும் வைபவ் தொடர்ந்து இலங்கை வீரர்களை நோக்கி கோபமாகச் சைகை காட்டியபடியே சென்றார். வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் முதிர்ச்சி அடைந்திருந்தாலும், மனதளவில் இன்னும் 15 வயது சிறுவனாகவே இருக்கிறார். இதன் காரணமாகவே சின்னச்சின்ன ஸ்லெட்ஜிங்கையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் வைபவ் சூர்யவன்ஷி கொந்தளித்து வருகிறார்.
இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் ஆக்ரோஷத்தை கொஞ்சம் கட்டுப்படுத்த பயிற்சியாளர்கள் முனைய வேண்டும். அவரை சில நேரம் சீனியர் வீரர்களுடன் நீண்ட நேரம் உரையாடல் வைக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் எதிரணி வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷியை கோபப்படுத்தியே எளிதாக விக்கெட்டை வீழ்த்த முயற்சிப்பார்கள்.