யுவன் இசையில் பாடலாசிரியராக அறிமுகம் நா. முத்துக்குமாரின் மகன் ஆதவன்! |aadhavan-muthukumar-lyricist-debut-yuvan-shankar-raja-rajas-playlist

Spread the love

யுவன் ஷங்கர் ராஜாவும், மறைந்த நா.முத்துக்குமாரும், 75-க்கும் மேற்பட்ட படங்களில் 400-க்கும் அதிகமான பாடல்களைத் தந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் கடைசியாக வெளியான படம் ‘தரமணி’.

இவர்களின் கூட்டணியிலிருந்து தமிழ் சினிமாவுக்குப் பல முக்கியமான பாடல்கள் கிடைத்துள்ளன. ‘ராஜா’ஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தை, ‘குடும்பஸ்தன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என். சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.

எலிஃபென்டைன் எக்ஸ் பேனரின் கீழ் ரமணன் பாலகங்காதரன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக இணைந்துள்ளார்.

மேலும், வெங்கட் பிரபு இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இளையராஜாவின் சகோதரர் பாஸ்கரின் மகன் ஜெயன், சோனா ஒளிக்கல், வாகை சந்திரசேகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *