ரகசிய காதலுக்காக மனைவியைக் கொன்ற இந்திய டெக்கி | Avinash Narne indian techie wife murder case USA

Spread the love

விசாரணை ஆழமாகச் செல்லச் செல்ல, இந்த கொலையின் பின்னணியில் இருந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. அவினாஷுக்கு இந்தியாவில் பல ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் “ரகசிய உறவு” இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில்தான், கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட ராஜிதாவை அவினாஷ் திருமணம் செய்துள்ளார். கொடுமையின் உச்சமாக, அவினாஷின் திருமணத்தில் அவரது ரகசிய காதலியும் கலந்துகொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். திருமணத்திற்குப் பிறகும், காதலர்கள் இருவரும் தங்கள் உறவைத் தொடர்ந்துள்ளனர்.

கொலை நடந்த நாளன்று, அவினாஷ் தனது காதலிக்கு குறைந்தது நான்கு முறையாவது தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். குளியலறையின் கதவை உடைக்க முயற்சிப்பதாக காவல்துறையிடம் நாடகமாடிய நேரத்தில் கூட, அவர் தனது காதலியுடன் பேசியிருக்கிறார். மேலும், தனது மனைவியின் சடலத்தை புகைப்படம் எடுத்து அதைத் தனது காதலிக்கு அனுப்பிய கொடூரமும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதவிர, ராஜிதா இறப்பதற்கு முன்பு பலமுறை அவினாஷுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளும் முக்கிய ஆதாரங்களாக சிக்கியுள்ளன.

அவினாஷ் தனக்குக் கொடுத்த பானங்கள் “கசப்பாக” இருப்பதாகவும், சில சமயங்களில் “மருந்து” மற்றும் “இருமல் மருந்து” சுவைப்பதாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார்.

ஒன்பது மாத கால நீண்ட விசாரணைக்குப் பிறகு, திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ஜூலை 5-ம் தேதி அவினாஷ் மீது முதல்-நிலை கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது, 5 மில்லியன் டாலர் பிணையில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *