ரஷ்யாவுக்கு பலத்த அடி.. நடு ராத்திரியில் உக்ரைன் கொடுத்த மறக்க முடியாத பரிசு! மாஸ்கோவில் பதற்றம் | Two dead as Ukraine launches one of its largest drone strikes on Moscow region

Spread the love

International

oi-Halley Karthik

மாஸ்கோ: ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நேற்றிரவு உக்ரைன் மிகப்பெரிய அளவில் ட்ரோன் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தலைநகரிலேயே இவ்வளவு பெரிய தாக்குதலை ரஷ்யா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

மாஸ்கோ மீது இந்த அளவுக்கு இதற்கு முன்னர் ரஷ்யா தாக்குதல் நடத்தியது கிடையாது. மாஸ்கோவின் சோஃபினோ பகுதியில் 44வது பெண் ஒருவரும், ஒரெகோவோ-ஜுவேவா மாவட்டத்தில் ஒரு முதியவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்திருக்கின்றனர். இது தவிர 6 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

Ukraine

மாஸ்கோவை நோக்கி வந்த.. 450 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்த பிராந்தியத்தில் 249 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். மாஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதலில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது தவி சில வீடுகளிலும் தீ பரவியுள்ளது.

தாக்குதல் காரணமாக மாஸ்கோவின் மிகப்பெரிய விமான நிலையமான ஷெரெமெட்டியேவோ மற்றும் வ்னுகோவோ ஆகிய இரு முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்னர் அவரை நீடிக்கப்பட்டன.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுத்திருக்கிறது. உக்ரைனின் கீவ் மற்றும் சுமி பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கீவ் அருகே உள்ள ஃபாஸ்டிவ் நகரில் ஒரு தாயும் அவரது 2 சிறு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். சுமி பிராந்தியத்தில் பொது மக்கள் பயணித்த கார் மீது ரஷ்ய ட்ரோன் தாக்கியதில் 4 பேர் பலியாகினர்.

இந்த மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதலுடன் ரஷ்யா மீதான புதிய தடைகள் மசோதா கையெழுத்தாகியுள்ளது. இதன்படி ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது. இதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதார முடக்கத்தை அமெரிக்கா தீவிரப்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *