ரஷ்யாவின் இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணம், கடந்த மாதம் உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா – உக்ரைன் போர் நிலைமை இப்படி இருக்க, கடந்த சனிக்கிழமை (ஜூலை 4, 2026), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் போன்காலில் 90 நிமிடங்கள் பேசியிருக்கின்றனர்.
அது குறித்து அமெரிக்காவின் முன்னாள் ரஷ்ய தூதுவர் யூரி உஷாகோவ், “உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இந்த நெருக்கடிக்கு அமைதியான தீர்வுகளைக் காண்பதற்கும் தான் தயாராக இருப்பதை அமெரிக்க அதிபர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அவருடைய சிறப்புப் பிரதிநிதிகளான டிக் விட்கோவ் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் தொடர்ந்து இதற்கான சமரச முயற்சிகளை மேற்கொள்வார்கள்… தங்களுக்கு ஏதுவான ஒரு நேரத்தில் அவர்கள் மாஸ்கோவிற்குப் பயணம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ரஷ்ய தரப்பிலிருந்து, தங்களின் அடிப்படை நிலைப்பாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே இதற்கு அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வு சாத்தியம் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.