ரஷ்ய எண்ணெய் விவகாரம்: 100% வரி குறித்து ட்ரம்ப் புதிய உத்தரவு|Trump’s Russia Oil Twist: Pressure on India Eases—for Now?

Spread the love

ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று வருகிறது அமெரிக்கா. இந்தப் போர் விரைவில் முடிய வேண்டும் என்றுதான் அதிபரானதிலிருந்து உறுதியாக இருந்து வருகிறார் ட்ரம்ப்.

வரிகள், தடைகள், பேச்சுவார்த்தை என எதுவும் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவை அழைத்துவரவில்லை.

இதனால், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வணிகம் செய்யும் டாப் 5 நாடுகள் மீது 100 சதவிகித இரண்டாம் கட்ட வரி விதித்து ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்கத் திட்டமிட்டது அமெரிக்கா.

இதற்காக 2026-ஆம் ஆண்டின் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் குறித்த லிண்ட்சே ஓ. கிரஹாம் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டம் அமெரிக்காவின் கீழ்சபை, மேல்சபை ஒப்புதல் பெற்று, கடந்த மாதம், ட்ரம்ப் கையெழுத்திட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரத் தயாரானது.

ஆனால், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அமெரிக்கப் பயணம் இருந்ததால், உடனடி அமல் தள்ளிப்போடப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *