நாளை (நவம்பர் 30) கூடும் நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர உள்ளது மத்திய பாஜக அரசு.
இந்த மசோதாவிற்கு திமுக ஆதரவளித்துள்ளது.
ராகுல் காந்தியின் 2027 பதிவு
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 28) ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “ஒவ்வொரு இளம் இந்தியரும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் – பாஜகவை அதிகாரத்தில் தக்கவைக்கவும், உங்கள் உரிமைகளைப் பறிக்கவுமே 850 என்ற எண்ணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

நியாயமான தொகுதி மறுவரையறை இப்படித்தான் இருக்க வேண்டும்:
850 இடங்கள் அல்ல, 543 இடங்கள்
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்ளாமல், 2027 சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைய வேண்டும்.
அனைத்துக் கட்சிகளும் இடம்பெற்ற நடுநிலையான தொகுதி மறுவரையறை ஆணையத்தால் முடிவு செய்யப்பட வேண்டும். ஞானேஷ் குமாரின் கூட்டணியால் அல்ல.
543 இடங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, அதனுடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) உள்-ஒதுக்கீடு” என்று பதிவிட்டுள்ளார்.
2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கிடப்பட்டால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும்.