இன்று மாலை 1,041 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சதய விழாவின் இரண்டாம் நாளான நாளை, அரசு சார்பில் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். சதய விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவதால், தஞ்சாவூர் விழாக்கோலத்தில் களைக்கட்டியுள்ளது.
ராஜ ராஜ சோழனின் 1,041-வது சதய விழா – விழாக்கோலத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில்!