ராமநாதபுரத்தில் அதிர்ச்சி.. 7 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு! போலீஸ் தீவிர விசாரணை | Ramanathapuram: 7-Year-Old Girl Found Dead in Well After Going Missing

Spread the love

Tamilnadu

oi-Mani Singh S

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த 7-வயது சிறுமி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக சிறுமி மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் உள்ள கிணற்றில் 7 வயது சிறுமி மாயமான நிலையில், அருகில் உள்ள வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Ramanathapuram 7-Year-Old Girl Found Dead in Well After Going Missing

விடுமுறை தினம் என்பதால் தனது தந்தை வீட்டிற்கு மதுரையில் இருந்து ராமநாதபுரம் பசும்பொன் நகருக்கு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பெண் வந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த போது அதிகாலையில் திடீரென மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டில் புழுக்கமாக இருப்பதாக கூறி கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர்.

அதிகாலை 5 மணியளவில் சிறுமியின் தாத்தா, தனது பேத்தி காணாமல் போனதை உணர்ந்துள்ளார். உடனடியாக பதறியடித்துக்கொண்டு எழுந்த சிறுமியின் குடும்பத்தினர், சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் சிறுமியின் சடலம் கிடப்பதை கண்டனர்.

உடனடியாக சிறுமியின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் உடலில் காயம் எதுவும் இல்லை என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

சிறுமி மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட தகவல் அறிந்ததும் விரைந்து வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 7 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *