ராமநாதபுரம்: தங்கள் வாக்கினைத் தங்களுக்கே செலுத்த முடியாத பிரதான கட்சி வேட்பாளர்கள்! | Candidates who can not pay their votes themselves.

Spread the love

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் வாக்கு உள்ளது. இதனால் ராஜகண்ணப்பனும் தனது வாக்கினைத் தனக்கு போட முடியாது.

அமைச்சர் ராஜகண்ணப்பன்

அமைச்சர் ராஜகண்ணப்பன்
உ.பாண்டி

தேர்தல் பிரசாரம் துவங்கிய நாள் முதல் கொழுத்தும் வெயிலில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள குக்கிராமங்கள் தொடங்கி நகர்புறங்கள் வரையில் உள்ள சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து சென்று தங்களுக்கு வாக்கு கேட்டனர் இந்த வேட்பாளர்கள்.

இவர்களுக்கு ஆதரவாக அவர்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூட இந்த வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இவை எல்லாம் வெற்றியைத் தராது எனக் கருதி பண்ட பாத்திர அன்பளிப்புகள் தொடங்கி பண பட்டுவாடா வரை செய்து வாக்கு திரட்டினர்.

தங்களுக்கு வாக்காளர்கள் வாக்கு போட வேண்டும் என்பதற்காக தேர்தல் களத்தில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்த இந்த வேட்பாளர்களும், அவரது குடும்பத்தினரும் கூட அவர்களுக்குத் தேவையான வாக்கினைச் செலுத்திக்கொள்ள முடியாத நிலை தொகுதி மாறி போட்டியிட்ட காரணத்தினால் உருவாகி போனதை என்னவென்று சொல்வது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *