
பசும்பொன் நகர் பகுதியில் 5 வயது சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென காணமால் போனதாக சொல்லப்படுகிறது. உடனே பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் காணமால் போன சிறுமியை தேடி வந்த நிலையில் நேற்று பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட சிறுமியின் சடலத்தை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரையை சேர்ந்தவர் பாலகணேஷ் இவருடைய மனைவி கார்த்திகைச்செல்வி. இந்த தம்பதிக்கு சாய் தீப்தி மற்றும சாரு நித்திகா என்ற 5 வயது இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் குழந்தைகள் இருவரையும் பசும்பொன் நகரில் இருக்கும் தன்னுடைய தந்தை வீட்டுக்கு அழைந்து சென்றுள்ளார் கார்த்திகைச் செல்வி.
இரட்டை குழந்தைகள் மற்றும் கார்த்திகைச்செல்வியின் அப்பா, அம்மா ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் அதிகாலை 3 மணியளவில் புழுக்கமாக இருந்ததால், வீட்டின் மெயின் கதவைத் திறந்து வைத்தப்படி உறவினர்கள் அனைவரும் உறங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று (28.06.2026) அதிகாலை சுமார் 03.30 மணியளவில் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சாய் தீப்தி காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து, உறவினர்கள் அதிகாலை முதலே அருகில் உள்ள குளம் போன்ற பல இடங்களில் தீவிரமாக தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், உடனே இதுகுறித்து கார்த்திகைச்செல்வி பஜார் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பால்பாண்டி என்பவரின் வீட்டு அருகே இருந்த கிணற்றை ஆய்வு செய்தபோது, கிணற்று தண்ணீரில் சிறுமி சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தீயணைப்பு துறையினர் மூலம் சிறுமியின் உடலை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், சிறுமி தானாக தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாராவது சிறுமியை கடத்திச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், சந்தேகத்தின் பேரில் நெருங்கிய உறவினர் ஒருவர் மற்றும் அருகில் வசித்த அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர் விசாரணையின் சிறுமியின் அத்தை மற்றும் மூன்று இளைஞர்களோடு சிறுமியை கிணற்றில் தள்ளிவிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விசாரணையின் போது அந்த பெண் திருமணத்தின் போது சில பிரச்சனைகளாலும் ,பொறாமையின் காரணமாக இந்த செயலை செய்துள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. சிறுமியை மர்மமான முறையில் கடத்தி கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.