ராமாயணம்: “இந்த நாளுக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன்” – நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சி| Ramayana: “I have been eagerly waiting for this day” – Actress Sai Pallavi Leschi

Spread the love

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் – தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருபெரும் உலகளாவிய ஆளுமைகள் இணைந்து இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்கள்.

சாய் பல்லவி

சாய் பல்லவி

அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.ரஹமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய நடிகை சாய் பல்லவி,“மீண்டும் சென்னையில், அதுவும் நமது சொந்த மண்ணில் இந்த நிகழ்வு நடப்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. இந்த நாளுக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *