ராஷ்மிகா மந்தனாவுக்குப் படுகாயம்; 6 வாரங்கள் ஓய்வெடுக்க சொன்ன மருத்துவர்கள்; என்ன நடந்தது?

Spread the love

நடிகை ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்திருக்கிறார்.

இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘மைசா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

'மைசா'
‘மைசா’

இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் கேரள மாநிலம் அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு முக்கியப் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்து வந்திருக்கிறது.

நடனமாடிக் கொண்டிருந்தபோது, ராஷ்மிகா மந்தனா எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்திருக்கிறார். கீழே விழுந்ததில் அவருக்கு தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முழுமையாகக் குணமடைய குறைந்தது 6 வாரங்கள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்காக, சமீபத்தில்தான் அவர் மிகக் கடினமான சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாடல் படப்பிடிப்பின்போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *