ரிப்பன் மாளிகையில் மேயர், ஆணையரிடம் மனு கொடுக்க சென்ற தூய்மைப் பணியாளர்கள் கைது | Sanitation workers arrested for going to petition Mayor and Commissioner at Ripon building

1379392
Spread the love

சென்னை: ரிப்பன் மாளிகையில் மேயர், ஆணையரிடம் மனு கொடுக்க சென்ற தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர். சென்​னை​யில் ராயபுரம், திரு​விக நகர் மண்​டலங்​களில் தூய்மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்படைத்ததை கண்​டித்​தும், தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​ கோரி​யும், தூய்மைப் பணி​யாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதி முதல் தொடர்ந்து 13 நாட்​கள் போராட்​டம் நடத்​தினர்.

நீதி​மன்ற உத்​தர​வால், நள்​ளிர​வில் இவர்​கள் கைது செய்​யப்பட்டு, குண்​டுக்​கட்​டாக அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 71 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின்கீழ் பணியில் சேராமல், தங்களை பழைய நிலையில் பணிபுரிய அனுமதிக்கும்படி கோரிக்கைவிடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே தூய்மைப் பணியாளர்கள் ராயபுரம், திரு​விக நகர் மண்டலத்தைச் சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். தொடர்ந்து, ரிப்பன் மாளிகைக்கு சென்று மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் ஆகியோரிடம் மனு அளித்து தூய்மைப் பணியாளர்கள் நூதன போராட்டம் நடத்தப்போவதாக பெரியமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று ஏராளமான போலீஸார் ரிப்பன் மாளிகை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்து பல பிரிவுகளாக தூய்மைப் பணியாளர்கள் நேற்று ரிப்பன் மாளிகை நோக்கி வந்தனர். அவர்களை ரயில் நிலையப் பகுதி அருகிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ரிப்பன் மாளிகை முன்பு சட்டவிரோதமாக கூடியதாக தூய்மைப் பணியாளர்களை போலீஸார் கைது செய்து, பல்வேறு இடங்களில் உள்ள சமுதாக நல கூடங்களில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை போலீஸார் விடுவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *