“ரூ.1 லட்சம் முதலீட்டில் ரூ.8,000 மாத வட்டி” ரூ.300 கோடியை சுருட்டிய மதுரை செண்பக பாண்டியன் கைது! -salem fraud finance company md arrested .

Spread the love

இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கானவர்களிடம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் தேடி வந்த நிலையில், நிதி நிறுவன இயக்குநரான மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சேலம் தம்பியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கைதான செண்பக பாண்டியன்

கைதான செண்பக பாண்டியன்

இது குறித்து தெரிவித்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், “மக்களின் பேராசையை மட்டுமே முதலீடாகக் கொண்டு இந்த மெகா மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் ஏமாந்திருக்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் பலரும் தங்களின் வீடுகளை அடமானம் வைத்து முதலீடு செய்திருக்கிறார்கள். இரண்டு மாதம் மட்டுமே வட்டி கொடுத்திருக்கிறார்கள். மூன்றாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *