ரூ.11,000 கோடி முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்! | CM Vijay ஈn London – Signs Major MoUs!

Spread the love

இது தொடர்பாக முதல்வர் விஜய்யின் அலுவலகம், “இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநர் திரு. ஹரிகிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் திரு. டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோரும் கையெழுத்திட்டு, ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்” என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *