ரூ.500 கொடுத்தா ரகசியம் சொல்றேன்.. Followers-க்கு விபூதி அடித்த மர்மநபர்! – Kumudam

Spread the love

சமூக வலைதளத்தில் பெரிய ரகசியத்தை வெளியிடப் போவதாகக் கூறி, டெலிகிராம் லிங்க் மூலம் சுமார் ரூ.8.5 கோடி வரை வசூலித்து விட்டு இணையவாசிகளிடம் மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

சமீபத்தில் ’25 August 2026′ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றில், தொடர்ந்து சில ரீல்ஸ்கள் பதிவிடப்பட்டன. அதில், “ஆகஸ்ட் 25-ஆம் தேதி மிகப்பெரிய ரகசியம் ஒன்றை வெளியிடப் போகிறேன், இதைப் பார்த்தால் யாரும் வருத்தப்பட மாட்டீர்கள்” எனக் கூறி சஸ்பென்ஸ் ஏற்றி, தனது கணக்கைப் பின் தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் அதிக பார்வைகளைப் பெற்று வைரலான நிலையில், “இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதால் டெலிகிராமில் வெளியிடுகிறேன்” எனக் கூறி ஒரு லிங்கை பகிர்ந்துள்ளார்.

அந்த டெலிகிராம் லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றவர்களிடம், குறிப்பிட்ட வீடியோவைப் பார்க்க ரூ.500 செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. அந்தப் பெரிய ரகசியத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் சுமார் 1.66 லட்சம் பேர் பணத்தைச் செலுத்தியதாகவும், இதன் மூலம் ஏறத்தாழ ரூ.8.5 கோடி வசூலானதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பணம் செலுத்திய பிறகு அந்த நபர் வெளியிட்ட வீடியோவில், அனைவரும் எதிர்பார்த்த அந்தப் பிரம்மாண்ட ரகசியத்திற்குப் பதிலாக ஒரு சாதாரண தன்னம்பிக்கை (Motivational) வீடியோ மட்டுமே இடம்பெற்றிருந்தது. பெரிய ரகசியம் என்று நம்பிப் பணத்தைக் கொடுத்து ஏமாந்த இணையவாசிகள், இது திட்டமிடப்பட்ட மிகப்பெரிய ஆன்லைன் மோசடி என சமூக வலைதளங்களில் கொந்தளித்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *