கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.88 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி பணத்தை இந்தக் கும்பல் மோசடியாகப் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரூ.150 கோடி போலி சிகரெட்டுகள்
ஃபால்டா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நடத்தப்பட்ட சோதனையில், புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட போலி, தரமற்ற சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மொத்தம் 8.76 கோடி சிகரெட்டுகள், அதாவது 8,410 அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.150 கோடிக்கும் அதிகமாகும். அவற்றை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத சிகரெட் தயாரிப்பு, ரகசிய விற்பனை, போலி வரிச் சலுகைகள் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட கும்பல்கள் மீதும் டிஜிஜிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டு சட்டவிரோத சிகரெட் தயாரிப்பு ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அங்கு சுமார் 25 லட்சம் சிகரெட்டுகள், மூன்று தயாரிப்பு, பொட்டலமிடும் இயந்திரத் தொகுப்புகள் கைப்பற்றப்பட்டன.