இதுகுறித்து திருப்புனித்துரா காவல் நிலையத்தில் கடந்த ஜன. 5 அன்று அவர் புகாரளித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக வர்ஷா சிங், அயனா ஜோசப் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் அது அவர்களின் போலியான பெயர்கள் என்று தெரிய வந்தது. இந்த வழக்கு மேல் விசாரணைக்காக கொச்சி சைபர் காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
“பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகளின் அடிப்படையில் நாங்கள் விசாரணையைத் நடத்தி வருகிறோம். அவை, போலி வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மோசடி நபர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகள் விரைவில் முடக்கப்படும்” என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளத்தில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் இணைய மோசடியின் மூலம் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் ஏமாற்றப்பட்டுள்ளது. இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட சுமார் 36,000 வங்கிக் கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர். இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மோசமான அளவில் அதிகரித்து வருகின்றது.