கிரிக்கெட்:
இந்தியா-இலங்கை இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று(7ந்தேதி) நடைபெற்றது. ரியான் பராக் இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. அவிஷ்கா பெர்ணான்டோ 96 ரன்கள் குவித்தார். நிஷாங்கா 45 ரன்கள், குஷால் மெண்டிஸ் 59 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 23 ரன்கள் எடுத்தனர்.
249 ரன்கள் எடுத்தால் வெற்றி
இந்தியா தரப்பில் ரியான்பராக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிராஜ், அக்ஷர் பட்டேல்,வாஷிங்டன் சுந்தர்,குல்தீப்யாதவ் ஆகியோர் தலா ஒருவிக்கெட் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. வழக்கம் போல் சிறப்பாக விளையாடிய ரோகித்சர்மா 35 ரன்களில் அவுட்ஆனார்.
இதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இலங்கையில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீர்கள் வருவதும் அவுட்டாகி போவதுமாக இருந்தனர்.
110 ரன்கள்வித்தியாசத்தில்
கில் 6 ரன், கோலி 20 ரன்,ரிஷப்பண்ட் 6 ரன், ஸ்ரேயஸ் அய்யர் 8 ரன், அக்ஷர் பட்டேல் 2 ரன், ரியான்பராக் 15 ரன், ஷிவம் தூபே 9 ரன், வாஷிங்டன் சுந்தர் 30 ரன், குல்தீப் யாதவ் 6 ரன் என்று அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டினர். முகமது சிராஜ் ரன் கணக்கை தொடங்காமல் களத்தில் இருந்தார்.
முடிவில் இந்திய அணி 26.1 ஓவரில் 138 ரன் மட்டுமே எடுத்து சுருண்டது. இதனால் இலங்கை அணி 110 ரன்கள்வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.துனித் வெல்லலகே 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.தீக்ஷனா, வாண்டர்ஷே ஆகியோர் தலா 2 விக்கெட்டும், அஷிதா பெர்ணான்டோ ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. முன்னதாக முதல் ஒரு நாள் போட்டி சமனில் முடிந்தது .27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி இலங்கை சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
எந்த தவறினாலும் வெற்றியை இழக்க கூடாது- முஹம்மது யூனுஸ்