‘ரோடு ஷோ, ரூ.134 கோடி மதிப்பிலான மருத்துவமனை திறப்பு’ – முதல்வர் விஜய்யின் திருச்சி விசிட் அஜெண்டா | chief minister joseph vijay trichy visit update

Spread the love

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், வரும் 20-ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று திருச்சிக்கு வருகைதர இருக்கிறார். அன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணிக்கு திருச்சி வரும் முதல்வர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 500 நோயாளிகள் சிறப்புச் சிகிச்சை பெறும் வகையில் ரூ.134 கோடி செலவில் நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்.

பிறகு அங்கிருந்து அண்ணா விளையாட்டரங்கம் அருகே செல்லும் அவர் அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்து 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக, அந்தப் பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் விஜய் மதியம் விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்.

hospital building

hospital building
d.dixith

முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு, அண்மையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் திருச்சி வருகைபுரிந்து கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர், விமான நிலையத்திலிருந்து மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வரை ரோடு ஷோ நடத்த ஏற்பாடுகளையும், உரிய பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை நுழைவாயிலில் ஏற்பட்டுள்ள பள்ளம், மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கட்டடத்தில் பெயர்ந்து கிடக்கும் சிமெண்ட் பூச்சுகள் புதுப்பிக்கும் பணிகளும் வளாகத்தின் உள்ளே செல்லும் பாதை ஆகியவற்றில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும், முதலமைச்சர் திருச்சி விமான நிலையத்திலிருந்து மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வரை செல்லும் சாலை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அதோடு, முதலமைச்சர் விஜய் திருச்சி பயணத்தின்போது பிரமாண்டமான ரோடு ஷோ நடத்தவும், மக்களைச் சந்திக்கவும் ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சாலை வரை சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் வரிசையில் நின்று முதலமைச்சர் விஜய் வரவேற்கும் வகையில் இரும்பு கம்பிகள் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வர இருக்கும் நிலையில், முதல்வரின் இந்தத் திருச்சி விசிட் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *